Wednesday, February 6, 2008

பொதுமை

நீங்களே பாருங்கள் இந்த
எண்ணத்தின் தவிப்பை
யாரைப்போய்ச் சேர்வதென்று
திகைக்கிறது

கூடவே
தன் ஆரம்பம் முடிவு என்று
எவற்றையோ
பிடித்துவைத்துக்கொள்ளப்
பரபரக்கிறது

சுதந்திரம் வழக்கமாக விதிக்கும்
கட்டுப்பாடுகளை
மனனம் செய்துகொண்டிருக்கிறது

புதிது பழையது என்று
வேறு காண முடியாத
மெல்லொலி மேட்டில்
புல்வெளியாக
விரிந்து கொண்டிருக்கிறோமோ என்று
சந்தேகித்துக் கொள்கிறது

வானத்தின்
பலவீனப் பகுதியிலிருந்து
தனக்கு ஏதோ
அசரீரி வந்தது போலவும்
நினத்துக் கொள்கிறது

... எனவும் எனவும் நினைக்கிறது

நான் சொல்லத் துடிப்பது:
"ஏன் அலைக்கழிகிறாய்
உனது இருப்பின்
அசைவற்ற பொதுமையை
ஏன் கலைக்கப் பார்க்கிறாய்?"

No comments: