Wednesday, January 9, 2008

மாலை -- அடியில்

காடுகளுக்குள்ளிருந்து
தப்பி வந்தன ஓடைகள்

நீருக்கடியில் போய்
நினைவுகள் ஒளிந்து கொண்டன

புகை வராதபடி
பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தன

கரையில் சவுக்குத் தோப்புகளிடம்
அச்சம் கொண்டிருந்தன

சவுக்குத் தோப்புகள்
வேறு கவனமின்றி
வழி தெரியாத கூச்சல்களை
நிர்வாகம் செய்துகொண்டிருந்தன

00

அஸ்தமனக் கதிர்
ஊடுருவிப் பார்த்தபோது
நீருக்கடி நினைவுகள்
தம் உட்புறத்தைச்
சென்றடைந்திருந்தன.

எண்ணத் தொலையாத
தமது பிம்பங்களை
விட்டுச் சென்றிருந்தன,

காடுகளிடையே ஊர்ந்து பரவிக்
கதறித் திரிய
00

இப்போது
சல்லடையில் சலித்து இறங்கிய நுட்பங்களாக
பூமிக்கடியில்
என் இயக்கங்கள்

இயக்கங்களின்
தரைமட்ட பிம்பமாக நான்,
காடுகள் ஊர்ந்து பரவக்
களமாக

1 comment:

பனுவல் மணம் said...

அஸ்தமனக் கதிர் மனதில் ஊடுருவி எத்தனை கொடிய நினைவுகளை கிறி விட்டுவிடுகிறது